ஈரோடு இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் வேட்புமனு தாக்கல்

ஈரோடு இடைத்தேர்தலில் போட்டியிடும் ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

Update: 2023-02-03 09:31 GMT

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ந் தேதி நடக்கிறது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் காங்கிரசும், அ.தி.மு.க., ஓ.பி.எஸ் அணி, தே.மு.தி.க., அ.ம.மு.க., நாம் தமிழர் கட்சி என முக்கிய கட்சிகளின் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு உள்ளனர்.

இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 31-ந்தேதி தொடங்கியது. தே.மு.தி.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் உள்பட நேற்று வரை மொத்தம் 20 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிட திமுக கூட்டணி காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதனை தொடர்ந்து அதிமுக ஓ.பி.எஸ் அணி வேட்பாளர் செந்தில் முருகன் ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். அப்போது இரட்டை இலை சின்னத்தை கோரி தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் வேட்பாளர் செந்தில் முருகன் விருப்ப மனுவும் அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்