ஈரோடு: தனியார் பஸ் மீது ஸ்கூட்டர் மோதி விபத்து - வாலிபர் உயிரிழப்பு

சிவகிரி அருகே தனியார் பஸ் மீது ஸ்கூட்டர் மோதிய விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

Update: 2022-06-18 04:16 GMT

சிவகிரி,

சிவகிரி அருகே விளாங்காட்டுவலசு பகுதிக்கு முத்துரிலிருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ் வந்து கொண்டிருந்தது. அப்போது சந்தோஷ் என்ற வாலிபர் ஓட்டிவந்த ஸ்கூட்டர் தனியார் பஸ் மீது நேருக்கு நேர் பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்டதில் சந்தோஷ் மற்றும் பின்னால் அமர்ந்து வந்த நபர் உட்பட இரண்டு பேர் பலத்த காயம் அடைந்தனர்.

இவர்களை அப்பகுதியினர் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோத்த மருத்துவர் சந்தோஷ் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என்று தெரிவித்து உள்ளனர். படுகாயம் அடைந்த மற்றொரு நபர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

பின்னர், இது குறித்து தகவல் அறிந்த போலீசார் உயிரிழந்த சந்தோசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்