ஈரோடு: தனியார் பஸ் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதல் - வாலிபர் பலி

சிவகிரி அருகே தனியார் பஸ் ஸ்கூட்டர் நேருக்கு நேர் மோதிய விபத்தில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

Update: 2022-06-17 13:01 GMT

சிவகிரி,

ஈரோடு மாவட்டம்,சிவகிரி அருகே விளாங்காட்டுவலசில் இருந்து தனியார் பஸ் ஒன்று ஈரோடு வந்து கொண்டிருந்தது. பஸ்சின் எதிரே ஸ்கூட்டரில் இரு வாலிபர்கள் வந்து கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஸ்கூட்டர் பஸ் இரண்டும் நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.

இந்த விபத்தில் ஸ்கூட்டரில் இருந்து தூக்கி வீசப்பட்ட இருவரும் பலத்த காயம் அடைந்தனர். உடனே அருகில் இருந்தவர்கள் அவர்களை மீட்டு ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்களில் ஒருவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்து வந்த போலீசார் நடத்திய விசாரணையில் அவர்கள் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் என்றும் அவர்களில் உயிரிழந்தவர் ஆர். சந்தோஷ்(வயது 24) என்பது தெரிய வந்தது.

மேலும் விபத்தில் பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருபவர் பி. சந்தோஷ் (24) என்பதும் தெரிய வந்துள்ளது. போலீசார் இந்த விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்