ெரங்கமன்னார் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்

ஸ்ரீவில்லிபுத்தூரில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு ரெங்கமன்னார் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்.

Update: 2023-05-05 19:37 GMT

ஸ்ரீவில்லிபுத்தூர்.

ஸ்ரீவில்லிபுத்தூரில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு ரெங்கமன்னார் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார்.

சித்திரை திருவிழா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் சித்திரை திருவிழாவினை முன்னிட்டு நேற்று காலை 8 மணிக்கு ஆண்டாள், ெரங்க மன்னாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்றது. அதன் பிறகு ஆண்டாள் சேஷ வாகனத்திலும், ரெங்க மன்னார் தங்க குதிரை வாகனத்திலும் எழுந்தருளினர்.

இதையடுத்து மாட வீதிகள், ரத வீதிகள் வழியாக ஸ்ரீவில்லிபுத்தூர் ஆத்து கடை தெருவில் உள்ள ஆற்றில் இறங்கும் வைபவம் (ஆத்து கடை என்பது முன்பு காலத்தில் ஆறு ஓடியதாக ஐதிகம்) நடைபெற்றது.

ஆற்றில் இறங்கிய ரெங்கமன்னார்

நேற்று காலை 10.30 மணிக்கு ெரங்க மன்னார் பச்சை பட்டு உடுத்தி ஆற்றில் இறங்கினார். இதையடுத்து ஆண்டாள் சேஷ வாகனத்தில் இருக்க ரெங்க மன்னார் ஆண்டாளை சுற்றிவரும் வைபவம் நடைபெற்றது. இதனை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு இருந்தனர்.

பக்தர்கள் ஆங்காங்கே தங்களது நேர்த்திக்கடனை ெசலுத்தினர். ஸ்ரீவில்லிபுத்தூர் வி.பி.எம்.எம். அறக்கட்டளை சார்பில் மண்டகப்படி நடத்தப்பட்டு ஆண்டாள், ெரங்க மன்னாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் வி.பி.எம்.எம். கல்வி நிறுவனங்களின் சேர்மன் வி.பி.எம் சங்கர், தாளாளர் பழனி செல்வி சங்கர், துணை சேர்மன் தங்க பிரபு, சிந்துஜா தங்க பிரபு, துர்கா மீன லோசினி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் வி.பி.எம். அறக்கட்டளை சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதன் பிறகு ஆண்டாள், ெரங்க மன்னார் ஒவ்வொரு தெருக்களுக்கும் சென்று மண்டகப்படியில் கலந்து கொண்டு மாலையில் கோவிலுக்கு திரும்பினார்கள். 

Tags:    

மேலும் செய்திகள்