சாராயம் காய்ச்சி விற்றவர் கைது
தர்மபுரி அருகே சாராயம் காய்ச்சி விற்றவரை போலீசார் கைது செய்தனர். மேலும் 120 லிட்டர் ஊறலை அழித்தனர்.
தர்மபுரி அருகே உள்ள கடகத்தூரான் கொட்டாய் பகுதியில் சாராயம் காய்ச்சி விற்பதாக தர்மபுரி மதுவிலக்கு அமல்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் நேற்று அந்த பகுதியில் திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான முறையில் நின்றிருந்த அதேபகுதியை சேர்ந்த ராஜா (வயது 50) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். அவர் அங்குள்ள ஒரு தோப்புக்குள் சாராயம் காய்ச்சி விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அங்கு சென்று 120 லிட்டர் சாராய ஊறலை அழித்தனர். மேலும் அங்கிருந்த 7 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜாவை கைது செய்தனர்.