தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா

திருச்செங்கோடு நகராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.

Update: 2022-10-08 19:46 GMT

எலச்சிபாளையம்

திருச்செங்கோடு நகராட்சி தூய்மைப் பணியாளர்களுக்கு ரூ.5.75 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள் வழங்கும் விழா நகராட்சி வளாகத்தி்ல் நடந்தது. இதற்கு நகராட்சி பொறியாளர் சண்முகம் தலைமை தாங்கினார். நகர் மன்றத் தலைவர் நளினி சுரேஷ்பாபு கலந்துகொண்டார். தொடர்ந்து நகர தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு கையுறை, கூடைகள், மண்வெட்டி, குடங்கள், பக்கெட்டுகள், கோடாரிகள் உள்ளிட்ட உபகரணங்களை அவர் வழங்கினார்.

Tags:    

மேலும் செய்திகள்