கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்கள்
கிரிக்கெட் வீரர்களுக்கு உபகரணங்களை ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் 27-வது வார்டில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட துணை செயலாளர் புனிதா அஜய் மகேஷ் குமார் ஏற்பாட்டில் உச்சினி மாகாளியம்மன் கோவில் கிரீடம் மற்றும் வேல் மற்றும் கருப்பசாமி கோயிலில் 1000 லிட்டர் குடிநீர் டேங்க் வழங்குதல், கிரிக்கெட் வீரர்களுக்கு ரூ.20 ஆயிரம் மதிப்பீட்டில் கிரிக்கெட் உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா, நகர செயலாளர் பிரகாஷ், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளர் அஜய்மகேஷ்குமார் வரவேற்றார்.
இதில் வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. மற்றும் கழக செய்தி தொடர்பு இணைச் செயலாளர் கவிஞர் சல்மா ஆகியோர் நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நகர துணை செயலாளர்கள் சுப்புத்தாய், முத்துக்குமார், நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முடிவில் வார்டு செயலாளர் சுப்புராஜ் நன்றி கூறினார்.