பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா

அரியலூரில் பள்ளி, கல்லூரிகளில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

Update: 2023-01-13 19:00 GMT

அரியலூர் அரசு கலைக் கல்லூரியில் சுற்றுச்சூழல் அறிவியல் துறையில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. தமிழரின் பாரம்பரிய முறைப்படி மண் அடுப்பு, மண்பானை வைத்து, வாழை மரம், தென்னங்கீற்று தோரணம் கட்டி மாணவர்கள் வேட்டி, சட்டை அணிந்து, மாணவிகள் புடவை அணிந்து பொங்கல் விழாவை கொண்டாடினர். பொங்கலிட்டு பொங்கல் பானையை வைத்து மாணவிகள் கும்மி அடித்து உற்சாகமாக கொண்டாடினர். மேலும் உறியடித்தல், கயிறு இழுத்தல், மியூசிக் சேர், லெமன் வித் ஸ்பூன், கோலப் போட்டிகள் நடைபெற்றன. பாரம்பரிய நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது. முடிவில் சுற்றுச்சூழலை பாதுகாக்க அனைவருக்கும் துணிப்பை வழங்கப்பட்டது.

உடையார்பாளையம் வடக்கு நடுநிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் பண்டிகை பள்ளி தலைமை ஆசிரியர் ஹரி சுந்தர்ராஜ் தலைமையில் கொண்டாடப்பட்டது. இதில் ஆசிரியர்கள் மற்றும் சத்துணவு பணியாளர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டது. அனைத்து மாணவர்களுக்கும் சர்க்கரை பொங்கல் வழங்கி பொங்கல் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்