சமத்துவ மக்கள் கட்சி கூட்டம்

சாத்தான்குளத்தில் சமத்துவ மக்கள் கட்சி கூட்டம் நடைபெற்றது.

Update: 2022-07-12 15:55 GMT

சாத்தான்குளம்:

சாத்தான்குளத்தில் ஒன்றிய அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு ஒன்றிய செயலர் பெ. ஜான்ராஜா தலைமை தாங்கினார். மாவட்ட மகளிரணி செயலர் ஜெயந்திகுமார் முன்னிலை வகித்தார். ஒன்றிய துணை செயலர் அருண்குமார் வரவேற்றார். கூட்டத்தில் தெற்கு மாவட்ட செயலர் தயாளன், மாவட்ட துணை செயலர் சங்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

கூட்டத்தில் பெருந்தலைவர் காமராஜர், கட்சி நிறுவனத் தலைவர் நடிகர் சரத்குமார் பிறந்த நாள் அன்று ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, மக்களவை தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் அதிக பூத் கமிட்டி உறுப்பினர்களை நியமிப்பது, சாத்தான்குளத்தில் அனைத்து மகளிர் காவல் நிலையம் அமைக்க வலியுறுத்துவது உள்ளிட்ட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் ஸ்ரீவைகுண்டம் ஒன்றிய செயலர் தேவராஜ், ஆழ்வார்திருநகரி ஒன்றிய செயலர் லென்சிங் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்