சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2023-04-14 18:45 GMT

கிணத்துக்கடவு, 

அம்பேத்கர் பிறந்த தினம் சமத்துவ நாளாக கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி அனைத்து போலீஸ் நிலையங்களிலும் சமத்துவ உறுதிமொழி எடுக்க போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவிட்டு இருந்தார். அதன்படி, கிணத்துக்கடவு போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் தலைமையில் போலீசார் சமத்துவ உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்