சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Update: 2023-04-13 19:23 GMT

அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14-ந் தேதி சமத்துவ நாளாக கொண்டாடப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இதனை கருத்தில் கொண்டு அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக்கொள்ள அரசு ஆணையிட்டது. அதன்படி ஏப்ரல் 14-ந் தேதியான இன்று (வெள்ளிக்கிழமை) அரசு விடுமுறை நாள் என்பதால் நேற்று திருச்சி மாவட்டம் முசிறி ஊராட்சி ஒன்றியம் திண்ணக்கோணம் ஊராட்சியில் கருப்புகோவில் கொட்டம் கிராமத்தில் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தலைமையில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பணியாற்றும் பணியாளர்களுடன் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற உறுதிமொழி ஏற்கும் நிகழ்வில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் செல்வம் தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழியை அனைத்து அலுவலர்களும் ஏற்றுக்கொண்டனர். முன்னதாக அம்பேத்கர் உருவப்படத்துக்கும் மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் அன்பழகன் தலைமையில் உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் கமிஷனர் சத்தியப்பிரியா தலைமையிலும் மற்றும் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் சமத்துவநாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்