சமத்துவ வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
தூத்துக்குடியில் சமத்துவ வக்கீல் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இந்திய அரசியல் அமைப்பு சட்ட தந்தை அம்பேத்கர் உருவப்படத்தை அகற்ற சென்னை உயர்நீதிமன்ற பதிவாளர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய கோரியும், அனைத்து கோர்ட்டு அறைகளிலும் அம்பேத்கர் உருவப்படத்தை வைக்க உத்தரவிடக் கோரியும் விடுதலை சிறுத்தைகள் கட்சி சமத்துவ வக்கீல் சங்கம் சார்பில் நேற்று கோர்ட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட அமைப்பாளர் முனீஸ்குமார் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாநில துணை பொதுச் செயலாளர் இளையவளவன், துணை அமைப்பாளர் சார்லஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.