சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா
வாணியம்பாடியில் சமத்துவ மக்கள் கட்சி சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.
வேலூர் மண்டல சமத்துவ மக்கள் கட்சி சார்பில் வாணியம்பாடி கோணாமேடு பகுதியில் இந்து, முஸ்லீம் மற்றும் கிறிஸ்தவர்கள், கட்சி நிர்வாகிகள் இணைந்து வேலூர் மண்டல செயலாளர் ஞானதாஸ் தலைமையில் சமத்துவ பொங்கல் கொண்டாடினர். விழாவில் அனைத்து சமயத்தினர் இணைந்து பொங்கலிட்டு பொதுமக்களுக்கு இனிப்பு, பொங்கல் வழங்கினர். தொடந்து சமத்துவ மக்கள் கட்சி சார்பில் 30-க்கும் மேற்பட்ட எளியவர்களுக்கு இலவச சேலை, வேட்டி வழங்கினர். விழாவில் திருப்பத்தூர் மேற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி, ஒன்றிய செயலாளர்கள் பாலுசாமி (நாட்டறம்பள்ளி), சாது (பேரணாம்பட்டு), மாவட்ட மகளிரணி செயலாளர் கவிதா, மாவட்ட துணை செயலாளர் பாப்பாத்தி மற்றும் நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.