வேகம் காட்டும் ஈபிஎஸ் தரப்பு: பொதுக்குழு தீர்மானத்தை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தது

அதிமுகவின் பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்பட்டதும் தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Update: 2022-07-11 10:26 GMT

புதுடெல்லி,

அதிமுக இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட தீர்மானம் மற்றும் பொதுகுழுவில் கட்சி விதிகளில் கொண்டு வரப்பட்ட திருத்தங்களை தேர்தல் ஆணையத்தில் எடப்பாடி பழனிசாமி தரப்பு தாக்கல் செய்துள்ளது. பொறுப்பாளர்கள் மாற்றம், விதிகளை திருத்தம் செய்தது குறித்து தேர்தல் ஆணையத்தில் அதிமுக மின்னஞ்சல் மூலம் தாக்கல் செய்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்