பிரதமர் மோடியை வரவேற்க ஈ.பி.எஸ், ஓ.பி.எஸ் தனித்தனியே மதுரை பயணம்...!
பிரதமர் மோடியை வரவேற்க ஈபிஎஸ், ஓபிஎஸ் தனித்தனியே மதுரை பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சென்னை,
திண்டுக்கல் காந்திகிராம, பல்கலைக்கழத்தில் நாளை நடைபெறும் பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இதில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் கவர்னர் ஆர்.என்.ரவி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
பட்டமளிப்பு விழாவுக்கு வருகை தரும் பிரதமர் மோடி, பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் நாளை மதியம் 2 மணிக்கு மதுரை வருகிறார்.
இந்த நிலையில், தமிழகம் வரும் பிரதமர் மோடியை வரவேற்க எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தனித்தனியே மதுரை பயணம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. காலை 9.30 மணிக்கு எடப்பாடி பழனிசாமியும், காலை 10.50 மணிக்கு ஓபிஎஸ்-ம் சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.