சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கம்

நெல்லையில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தை மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-05 19:32 GMT

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு நெல்லை மாநகராட்சி சார்பில் சுற்றுச்சூழல் குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நீர்நிலைகளை சுத்தமாகவும், சுகாதாரமாகவும் வைத்திருக்கும் வகையில் கையெழுத்து இயக்கம் நெல்லை வண்ணார்பேட்டையில் நேற்று நடந்தது. மேயர் பி.எம்.சரவணன் தலைமை தாங்கி, கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து அவர் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மாநகராட்சி துணை ஆணையாளர் தாணுமலைமூர்த்தி, மாநகர் நல அலுவலர் டாக்டர் சரோஜா, சுகாதார அலுவலர் சாகுல்அமீது, சுகாதார ஆய்வாளர்கள் முருகன், சங்கரநாராயணன், மண்டல தலைவர் ரேவதி பிரபு, கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். சுற்றுச்சூழலை பாதுகாக்கும் விதமாக 4 மண்டல பகுதிகளில் மரக்கன்றுகள் நடும் பணியினை தொடங்கி வைக்கும் வகையில் ராமையன்பட்டி குப்பை சேகரிப்பு மையத்தில் மாநகராட்சி ஆணையாளர் சிவ கிருஷ்ணமூர்த்தி மரக்கன்று நட்டு தொடங்கி வைத்தார்.

Tags:    

மேலும் செய்திகள்