மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சுற்றுச்சூழல் கலந்தாய்வு கூட்டம்
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சுற்றுச்சூழல் கலந்தாய்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதி நடக்கிறது.
ராணிப்பேட்டை
வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் சார்பில் சுற்றுச்சூழல் கலந்தாய்வு கூட்டம் ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதி நடக்கிறது.
தொழிற்சாலைகளுக்கு இசைவாணை வழங்குதல், அவற்றை கண்காணித்தல் மற்றும் மாசு தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்தல் ஆகியவை வாரியத்தின் சில செயல்பாடுகளாகும். இந்த செயல்பாடுகளில் பெரும்பாலானவை கடந்த சில ஆண்டுகளில் இணைய வழி மூலமாக செயல்படுத்தப்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் தொழில்முனைவோருடன் நேரடி கலந்துரையாடல் மிகவும் குறைந்துள்ளது.
இந்த நிலையில் தொழிற்சாலைகள், பொது மக்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றுடன் நேரடி கலந்துரையாடல்களை எளிதாக்குவதற்கும், மிகவும் வெளிப்படையான மற்றும் நம்பகமான முறையில் செயல்படுத்துவதற்கும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியம் நேரடி கலந்தாய்வு கூட்டத்தை தற்போது நடத்தி வருகிறது.
தனிநபர், தொழிற்சாலைகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், பொது நலச்சங்கங்களின் பிரதிநிதிகள் தங்கள் குறைகளைத் தெரிவிக்க, சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ள, மாசு தொடர்பான பிரச்சினைகள், இசைவாணைகள் குறித்து புகார் செய்ய மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக ஆலோசனைகள், கருத்துகளை தெரிவிக்க இந்த அமர்வில் பங்கேற்று மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரை சந்திக்கலாம்.
வேலூர் மற்றும் ராணிப்பேட்டை மாவட்டத்தின் சுற்றுச்சூழல் குறித்த நேரடி கலந்தாய்வு கூட்டமானது வேலூரில் உள்ள மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகத்தில் ஒவ்வொரு மாதமும் 5-ந் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
நேரடி கலந்துரையாடலில் கலந்து கொள்ள விரும்புவோர், தங்கள் வருகைக்கு முன்னதாகவே இதற்காக வாரியத்தால் உருவாக்கப்பட்டுள்ள இணையவழி செயலியில் பதிவுசெய்து கொள்ளலாம் என்று பரிந்துரைக்கப்படுகிறது. இதன் மூலம் வாரிய அதிகாரிகள் பங்கேற்பாளர்களுக்கு நேரடி கலந்துரையாடல் நாளில் அல்லது முடிந்தால் அதற்கு முன்னதாகவும் பதிலளிக்க இயலும். இதற்காக வாரிய இணையதளமான www.tnpcb.govin இல் OPEN HOUSE- என்ற இணைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. பங்கேற்பாளர்கள் தங்கள் வருகையின்போது 'ஆதார்அட்டையை" தவறாமல் கொண்டு வர வேண்டும் என கலெக்டர் வளர்மதி தெரிவித்துள்ளார்.