கம்மாபுரம் ஒன்றியத்தில்பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களின் கணக்கெடுக்கும் பணி தீவிரம்

கம்மாபுரம் ஒன்றியத்தில் பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களின் கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2023-01-11 18:45 GMT


கம்மாபுரம், 

தமிழகத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டத்தின் மூலம் இடைநிற்றலை குறைக்கும் வகையில் பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்திய மாணவர்களை கணக்கெடுத்து, அவர்கள் கல்வி பயில நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன்படி கம்மாபுரம் ஒன்றியத்தில் கொரோனா தொற்று பரவல் காலத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகள், குடும்ப பொருளாதார சூழ்நிலையால் புலம்பெயர்ந்த பெற்றோர்களின் குழந்தைகள், 10 மற்றும் பிளஸ்-2 முடித்து உயர்கல்வி பயிலாத மாணவர்கள் உள்ளிட்ட குழந்தைகள் குறித்து கணக்கெடுப்பு பணி கார்குடல் பகுதியில் நடைபெற்றது.

கல்வியை தொடர நடவடிக்கை

இந்த பணியில் வட்டார வளமைய மேற்பார்வையாளர் செந்தில்குமார் தலைமையில் ஒருங்கிணைப்பாளர் ரசிகலா மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் இளவரசி, கோபாலகிருஷ்ணன், புனிதா, மெர்சி அமலா, ராஜேந்திரன், கனிமொழி, மோகன்தாஸ் மற்றும் பள்ளி தலைமையாசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோருடன் வீடுகள்தோறும் சென்று இடையில் நின்ற மாணவர்களை கணக்கெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

இந்த கணக்கெடுப்பின் போது, இடையில் நின்ற மாணவர்களின் பெற்றோர்களை சந்தித்து அரசின் நலத்திட்ட உதவிகளையும், அரசு சலுகைகளையும் கூறி ஆலோசனைகள் வழங்கியதுடன், கல்வியின் அவசியம் குறித்து அவர்களிடம் எடுத்துக்கூறி, உடனடியாக மாணவர்களை பள்ளியில் சேர்க்க வலியுறுத்தி, மீண்டும் அவர்கள் கல்வியை தொடர வலியுறுத்தினார்கள்.

இதே போல் கம்மாபுரம் ஊராட்சி ஒன்றியத்தில் அனைத்து கிராமங்களிலும் கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்