இஸ்ரோ முன்னாள் துணை இயக்குனர் பேட்டி

எதிர்காலத்தில் அணுசக்தியில் இயங்கும் வகையில் உபகரணங்கள் வடிவமைக்கப்படும் என இஸ்ரோ முன்னாள் துணை இயக்குனர் ஹரிகரன் கூறினார்.

Update: 2023-10-06 20:22 GMT

எதிர்காலத்தில் அணுசக்தியில் இயங்கும் வகையில் உபகரணங்கள் வடிவமைக்கப்படும் என இஸ்ரோ முன்னாள் துணை இயக்குனர் ஹரிகரன் கூறினார்.

பேட்டி

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள சூரியனார் கோவிலுக்கு இஸ்ரோ அமைப்பில் பணியாற்றும் மற்றும் பணியாற்றிய விஞ்ஞானிகள் குழுவாக நேற்று வந்திருந்தனர். பின்னர் சூரிய பெருமான் மற்றும் தனி தனி சன்னதிகளில் உள்ள நவக்கிரகங்களை சாமி தரிசனம் செய்தனர்.

பின்னர் இஸ்ரோ அமைப்பின் முன்னாள் துணை இயக்குனர் டாக்டர் ஹரிகரன் நிருபர்களிடம் கூறியதாவது:-

சந்திரனில் தற்போது இறங்கிய லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை சூரிய சக்தியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அணுசக்தியில் இயங்கும் வகையில்

14 நாட்கள் சூரிய ஒளியும், 14 நாட்கள் இருளிலும் உள்ள சந்திரனில் சூரிய ஒளி இல்லாத போது மைனஸ் 130 டிகிரி செல்சியஸ் குளிர் உள்ளதால் சூரிய சக்தியில் இயங்கும் பேட்டரிகள் செயல் இழந்து விட்டது.

எதிர்காலத்தில் அணுசக்தியில் இயங்கும் வகையில் உபகரணங்கள் வடிவமைக்கப்படும். அதற்காக இஸ்ரோ அமைப்பு அணுசக்தி விஞ்ஞானிகளுடன் இணைந்து செயல்படும்.

பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்

இஸ்ரோ விஞ்ஞானிகள் செய்த சாதனைகள் மற்றும் ஆய்வுகள் குறித்து மத்திய- மாநில பாட புத்தகங்களில் வெளியிட அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. பள்ளி மாணவ- மாணவிகள் அறிவியல் வளர்ச்சியையும், விஞ்ஞானத்தின் வளர்ச்சியையும் அறியும் விதத்தில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் இஸ்ரோ சார்பில் நடத்தப்பட்டு வருகிறது.

மெய்ஞானத்தின் வழிகாட்டுதலோடு விஞ்ஞானம் செயல்படுகிறது. மெய்ஞானத்தை மக்களிடையே வெளிக்கொண்டு வரவே தற்போது விஞ்ஞானம் முயற்சித்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆசி பெற்றனர்

தொடர்ந்து சூரியனார் கோவில் திருமடத்தில் திருக்கயிலாய பரம்பரை சிவாக்கிர யோகிகள் ஆதீனம் 28-வது குருமகாசன்னிதானம் மகாலிங்க தேசிக பரமாச்சாரியார் சுவாமிகளை அவர்கள் சந்தித்து ஆசி பெற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்