தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி
தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது.
இளையான்குடி
இளையான்குடி டாக்டர் சாகிர் உசேன் கல்லூரி, தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு கழகம், சென்னை தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் மற்றும் அழகப்பா பல்கலைக்கழகம் இணைந்து கல்லூரி படிப்பை முடித்த மாணவ-மாணவிகளுக்கு தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி நடைபெற்றது. ஒருங்கிணைப்பாளர் நாசர் வரவேற்று பேசினார். வேதியியல் துறை தலைவர் ஜபருல்லாஹ்கான் தலைமை உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக திருபுவனம் சமயபுரத்தாள் நீலா சுய உதவி குழு உரிமையாளர் நிர்மலா கலந்து கொண்டு சுய தொழில் திட்டமிடல் குறித்து பேசினார். மாவட்ட தொழில் மையம் உதவி இயக்குனர் தேவராஜ் மாவட்ட தொழில் மையம் மூலமாக வழங்கப்படும் கடன் உதவிகள் குறித்து விளக்கினார். சிவகங்கை மகளிர் திட்ட உதவி மேலாளர் ராஜ்குமார் பொருட்களை சந்தைப்படுத்தல் பற்றிய உத்திகள் குறித்து பேசினார். நிகழ்வில் கல்லூரி இறுதி ஆண்டு பயின்ற மாணவ-மாணவிகள் கலந்து கொண்டு பயன்பெற்றனர். பழைய மாணவர் தொழில் முனைவோர் ராமர் நன்றி கூறினார்.