தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி

ராமநாதபுரத்தில் தொழில் முனைவோர் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

Update: 2023-01-09 18:45 GMT

தமிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவனம், காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம் மற்றும் ராமநாதபுரம் வேலுமனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு மாணவர் புத்தாக்க கண்டுபிடிப்பு போட்டிக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ராமநாதபுரத்தில் நடைபெற்றது. வேலுமனோகரன் கலை அறிவியல் மகளிர் கல்லூரி தாளாளர் வேலுமனோகரன் தலைமை தாங்கினார். துணை தாளாளர் பார்த்தசாரதி, செயலாளர் சகுந்தலா பார்த்தசாரதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முதல்வர் காஞ்சனாஅமர்நாத் வரவேற்று பேசினார்.

அழகப்பா பல்கலைக்கழக கள ஒருங்கிணைப்பாளர் தழிழ்நாடு தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க நிறுவன ஜோஅருமைரூபன், மாணவிகளுக்கு தொழில்முனைவோர் விழிப்புணர்வு பற்றி கூறினார். கிரீன்ஸ்கார்ட் நிறுவனர் சங்கரலிங்கம் மாணவிகள் எப்படி தொழில்முனைவோராக வேண்டும் என்பதையும் அதற்கான வழிகாட்டுதல்களையும் எடுத்து கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை கல்லூரியின் தொழில்முனைவோர் மேம்பாட்டு மற்றும் புத்தாக்க ஒருங்கிணைப்பாளர் ரேணுகாதேவி செய்திருந்தார்.

Tags:    

மேலும் செய்திகள்