ஜவுளி பூங்கா அமைக்க தொழில்முனைவோர்கள் முன்வர வேண்டும்

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க தொழில்முனைவோர் முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி வேண்டுகோள் விடுத் துள்ளார்.

Update: 2023-04-27 18:45 GMT

மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜவுளி பூங்கா அமைக்க தொழில்முனைவோர் முன்வர வேண்டும் என மாவட்ட கலெக்டர் மகாபாரதி வேண்டுகோள் விடுத் துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

ஜவுளி பூங்கா

ஜவுளித்துறையில் முன்னோடி மாநிலங்களுள் ஒன்றாக தமிழகம் விளங்குகிறது. இத்துறையின் கட்டமைப்பை வலுப்படுத்த அரசு செயல்படுத்தி வரும் பலதிட்டங்களுள் சிறிய அளவிலான ஜவுளிப்பூங்கா அமைக்கும் திட்டமும் ஒன்றாகும். இந்த திட்டத்தின்கீழ் மயிலாடுதுறை மாவட்டத்தில் குறைந்தப்பட்சம் 2 ஏக்கர் நிலப்பரப்பில் குறைந்தப்பட்சம் 3 ஜவுளி உற்பத்தி தொழிற்கூடங்கள் அமைக்கப்பட வேண்டும். திட்டமதிப்பீட்டில் பொது உள்கட்டமைப்பு வசதிகள், பொதுப் பயன்பாட்டுக்கான கட்டிடங்கள் 50 சதவீதம் அல்லது ரூ.20 கோடியே 50 லட்சம் ஆகும். இதில் எது குறைவானதோ அது தமிழக அரசின் மானியமாக வழங்கப்படுகிறது.

தொழில்முனைவோர்கள் முன்வர வேண்டும்

தற்போது தொழில் முனைவோரின் கோரிக்கையை தொடர்ந்து, தகுதிவாய்ந்த திட்ட மதிப்பீட்டில், ஜவுளித் தொழிற்கூடங்கள் அமைப்பதற்கான கட்டிடங்களையும் சேர்த்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. எனவே சிறிய அளவிலான ஜவுளிப் பூங்கா அமைக்கும் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு அரசு வழங்கும் சலுகைகளை மயிலாடுதுறை மாவட்டத்தில் பயன்படுத்தி, தொழில் வளர்ச்சியை மேம்படுத்தவும், வேலைவாய்ப்புகளை பெருக்கவும் அனைத்து தொழில்முனைவோரும் முன்வர வேண்டும்.

மேலும் விவரங்களை, துணிநூல் துறை மண்டல துணை இயக்குநர் அலுவலகம், நவலடியான் காம்ப்ளக்ஸ் முதல் தளம், தாந்தோணிமலை, கரூர் மாவட்டம். 639005. கைபேசி எண். 9444656445,9092590486 என்ற முகவரிலும், எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்