தொழில் முனைவோர் ரூ.75 லட்சம் மானியத்துடன் கடன்பெற விண்ணப்பிக்கலாம்

தொழில் முனைவோர் கடன்பெற விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் அமர்குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

Update: 2022-07-28 17:49 GMT

தமிழக அரசின் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.75 லட்சம் மானியத்துடன் கூடிய தொழிற்கடன் பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் அமர் குஷ்வாஹா தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தொழில் தொடங்க

தமிழ்நாட்டில் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மேம்படவும், முதல் தலைமுறை தொழில் முனைவோர் நிறுவனங்களைத் தொடங்க புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் தமிழக அரசால் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 12-ம் வகுப்பு மற்றும் பட்டய தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் சுயமாக தொழில் தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது.

பொது பிரிவினர் 21 வயதுக்கு மேல் 35 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். சிறப்பு பிரிவினர்களான மகளிர், ஆதி திராவிடர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் ஆகியோருக்கு அதிகபட்ச வயது 45 ஆகும்.

இத்திட்டத்திற்கு ஆண்டு வருமானம் உச்ச வரம்பு ஏதுமில்லை. பயானளிகள் மூன்று ஆண்டுகளுக்கு குறையாமல் தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

அனைத்து உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் தொடங்க இத்திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம் முதல் அதிகபட்சம் ரூ.5 கோடி வரை கடன் பெற்று 25 சதவீதம் அல்லது அதிகபட்ச மானியம் ரூ.75 லட்சம் வரை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனம், பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி தொழில் முனைவோருக்கு கூடுதலாக 10 சதவீதம் மானியம், அதிகபட்சம் ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கலாம்

அரிசி ஆலை, மர இழைப்பகம், மாவு மில், மிளகாய் எண்ணெய் அரைக்கும் ஆலை, லேத் எந்திரம், அட்டைபெட்டி தயாரித்தல், பிரிண்டிங் எந்திரங்கள் மற்றும் சேவை சார்ந்த தொழில்களும் தொடங்கலாம்.

இணையதளத்தில் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் நேர்முகத்தேர்வின் மூலம் தகுதியின் அடிப்படையில் வங்கிக்கு பரிந்துரைக்கப்படும். திட்ட மதிப்பீட்டில் பொதுப் பிரிவினர் 10 சதவீதமும், சிறப்பு பிரிவினர் 5 சதவீதமும் தங்களது பங்காக முதலீடு செய்ய வேண்டும்.

இத்திட்டத்தின்கீழ் பயன்பெற விரும்புவோர் www.msmeonline.tn.gov.in/needs என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தை உரிய ஆவணங்களுடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், விவரங்களுக்கு, திருப்பத்தூர் எழில் நகரில் உள்ள மாவட்ட தொழில் மையத்தை அணுகலாம்.

இவ்வா அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்