தமிழ்நாடு மின்சார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் திருமக்கோட்டை எரிவாயு சுழலி மின் உற்பத்தி நிலையம் முன்பு நுழைவாயில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பொறியாளர் சங்க கிளை தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். இதில் பொறியாளர் சங்க தஞ்சை மண்டல செயலாளர் சம்பத் கலந்துகொண்டு பேசினார். கூட்டத்தில், நிறுத்தப்பட்ட மின் உற்பத்தி நிலையத்தை மீண்டும் இயக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில் தொழிலாளர் முன்னேற்ற சங்க கோட்ட செயலாளர் காளிதாஸ், பணியாளர்கள் கூட்டமைப்பு கோட்ட தலைவர் ராஜேந்திரன், சி.ஐ.டி.யூ. பொறுப்பாளர் செல்வநாதன் மற்றும் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.