டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மதுகுடித்த மர்ம கும்பல்

கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு டாஸ்மாக் கடைக்குள் புகுந்து மர்ம கும்பல் மதுகுடித்தனர்.

Update: 2022-08-16 19:34 GMT

ராஜபாளையம்,

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் டி.பி.மில்ஸ் சாலையில் டாஸ்மாக் கடை உள்ளது. சம்பவத்தன்று இரவில் கடையின் மேற்பார்வையாளர் ராஜப்பன் கடையை பூட்டி விட்டு சென்றார். பின்னர் காலையில் வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து ராஜப்பன் அளித்த தகவலின் பேரில் வடக்கு போலீசார் கடைக்கு வந்து சோதனை செய்தனர். அப்போது லாக்கரில் இருந்த பணம் திருட்டு போகவில்லை என்பது தெரியவந்தது. அதே நேரத்தில் 36 பீர்பாட்டில்கள், 10 மதுபாட்டில்கள் ஆகியவை திருட்டு போயிருந்தன. மேலும் கடையின் கண்காணிப்பு கேமராவை உடைத்துவிட்டு, கடைக்கு உள்ேள புகுந்த மர்ம கும்பல் அங்கு மது குடித்துவிட்டு, மதுபாட்டில்களை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதுகுறித்து வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைவரிசை காட்டிய கும்பலை தேடிருகின்றனர்.


Tags:    

மேலும் செய்திகள்