கோழிப்பண்ணையில் புகுந்த7 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது
கோழிப்பண்ணையில் புகுந்த 7 அடி நீள நாகப்பாம்பு பிடிபட்டது.
சித்தோட்டில் சீனிவாசன் என்பவருக்கு சொந்தமான கோழிப்பண்ணையில் கடந்த ஒரு வாரமாக கோழி குஞ்சுகள் மாயமாகி வந்தன. நாய் அல்லது கீரி பிடித்து சென்றிருக்கலாம் என்று நினைத்து கொண்டு இருந்தார். நேற்று அவர் பண்ணையில் சென்று பார்த்தபோது நாகப்பாம்பு ஊர்ந்து சென்றதை கவனித்தார். இதுகுறித்து ஈரோட்டை சேர்ந்த பாம்பு பிடி வீரரான யுவராஜாவுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அவர் அங்கு சென்று அந்த பாம்பை லாவகமாக பிடித்தார். அந்த பாம்பு சுமார் 7 அடி நீளம் இருந்தது.
இதேபோல் ஈரோடு மாணிக்கம்பாளையத்தை சேர்ந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜன் வீட்டிலும் நேற்று பாம்பு புகுந்தது. அங்கு சென்ற யுவராஜா 3½ அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பை பிடித்தார். ரங்கம்பாளையம் ரெயில் நகரில் ஒரு வீட்டில் 4 அடி சாரை பாம்பும், சாஸ்திரிநகரில் உள்ள ஒரு வீட்டில் புகுந்த 4 அடி நீளமுள்ள கொம்பேரி மூக்கன் பாம்பும் பிடிபட்டது.