ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு

நெமிலி ஸ்ரீபாலா பீடத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.

Update: 2023-01-01 17:32 GMT

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஸ்ரீ பாலா பீடத்தில் ஆங்கில புத்தாண்டு சிறப்பு வழிபாடு நேற்று நடைபெற்றது. அன்னை பாலா அபிஷேகமும், ஆராதனையையும் ஸ்ரீ பாலா பீட நிர்வாகி மோகன்ஜி செய்தார். சந்தோஷ பாலா என்னும் அன்னை பாலாவின் வண்ண படத்தை பீடாதிபதி கவிஞர் நெமிலி ஏழில்மணி வெளியிட, சென்னை சூர்யா மருத்துவமனை இதய நோய் பிரிவு தலைமை மருத்துவர் ஜெயராஜா தனது குடும்பத்துடன் பெற்றுக்கொண்டார். குருஜி பாபாஜியின் தலைமையில் ஆத்மீக குடும்பங்கள் பாலா பாராயண பாடல்களை பாடினார்கள். திரைப்பட பின்னணி பாடகி சுதா இன்னிசை வழங்கினார். பாலா பீட செயலாளர் முரளிதரன் தலைமையில் அன்னதானம் நடைபெற்றது. விழா ஏற்பாடுகளை நெமிலி இறைப்பணி மன்றத்தார் மற்றும் அன்னை பாலா ஆத்மீக குடும்பங்கள் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்