கோழிக்கறி சாப்பிட்ட என்ஜினீயரிங் மாணவர் சாவு

கோழிக்கறி சாப்பிட்ட என்ஜினீயரிங் மாணவர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-07-22 21:53 GMT

சென்னை,

ஆந்திர மாநிலம் கடப்பா பகுதியை சேர்ந்தவர் தீராஜ் ரெட்டி (வயது 20). இவர், தனது நண்பர்களுடன் சோழிங்கநல்லூர் எம்.ஜி.ஆர். சாலையில் உள்ள ஒரு விடுதியில் தங்கி, செம்மஞ்சேரியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. கம்ப்யூட்டர் சயின்ஸ் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

நேற்று முன்தினம் கல்லூரிக்கு சென்ற தீராஜ் ரெட்டி வழக்கம்போல் மதியம் கல்லூரியில் உள்ள உணவகத்தில் சாப்பாடு மற்றும் கோழிக்கறி சாப்பிட்டார். சாப்பிட்ட சிறிது நேரத்தில் அவருக்கு வாந்தி ஏற்பட்டது. அவருடன் இருந்த நண்பர்கள் அவரை சோழிங்கநல்லூரில் உள்ள தங்கும் விடுதிக்கு அழைத்து சென்றனர்.

சாவு

அங்கும் அவருக்கு வாந்தி ஏற்பட்டது. அவரது நண்பர்கள் தீராஜ்ரெட்டியை அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துசென்றனர். அங்கு முதல்உதவி சிகிச்சை பெற்று பின்னர் மற்றொரு ஆஸ்பத்திரிக்கு செல்ல ஆம்புலன்சுக்காக காத்திருந்தனர்.

அப்போது திடீரென தீராஜ் ரெட்டி உடல் சோர்வு ஏற்பட்டு பரிதாபமாக இறந்தார். இதுபற்றி தகவல் அறிந்துவந்த செம்மஞ்சேரி போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்