என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை

என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் தற்கொலை

Update: 2023-03-28 18:45 GMT

ஆர்.எஸ்.புரம்

கோவை ஆர்.எஸ்.புரம் மருதாச்சலம் தெருவை சேர்ந்தவர் பிரேம்குமார் (வயது 55). சிவில் என்ஜினீயர். இவரது மகன் பிரணவ் (19). கோவையை சேர்ந்த தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் பி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இந்தநிலையில், கடந்த 26-ந் தேதி அவரது பெற்றோர் உறவினர் வீட்டு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக சென்றனர். அப்போது பெற்றோருடன் செல்ல மறுத்து பிரணவ் மட்டும் வீட்டில் தனியாக இருந்ததாக தெரிகிறது. இதைத் தொடர்ந்து திருமண நிகழ்ச்சிக்கு சென்ற அவரது பெற்றோர் அன்றைய தினமே வீட்டுக்கு திரும்பினர்.

அப்போது பிரணவ் அறைக்கு சென்று பார்த்த போது அவர் தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த பெற்றோர் அவரை மீட்டு கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கிருந்து கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் மாணவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரது தற்கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து தெரியவில்லை. இது தொடர்பாக ஆர்.எஸ்.புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்