பொறியியல் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சாதனை

பொறியியல் 2-ம் ஆண்டு நேரடி சேர்க்கையில் பாலிடெக்னிக் மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

Update: 2022-09-16 18:45 GMT

பாவூர்சத்திரம்:

தமிழகத்தில் தற்போது என்ஜினீயரிங் கல்லூரிகளில் நேரடி இரண்டாம் ஆண்டு சேர்க்கைக்கான கவுன்சிலிங் நடைபெற்று வருகிறது. பாலிடெக்னிக் கல்லூரிகளில் டிப்ளமோ படித்து தேர்ச்சி பெற்ற மாணவர்கள் இந்த கவுன்சிலிங்கில் பங்கேற்று வருகின்றனர். இதில் பாவூர்சத்திரம் எம்.எஸ்.பி.வேலாயுத நாடார்- லட்சுமித்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் மாணவி சிவரஞ்சனி, மாநில அளவில் அதிக கட்ஆப் மதிப்பெண்கள் பெற்று முதலாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். மேலும் முதல் 7 நாட்கள் நடைபெற்ற கவுன்சிலிங்கில், அண்ணா பல்கலைக்கழகம், அரசு பொறியியல் கல்லூரிகள், மெட்ராஸ் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி, கோயம்புத்தூர் இன்ஸ்டியூட் ஆப் டெக்னாலஜி போன்ற மிகச் சிறந்த அரசு என்ஜினியரிங் கல்லூரிகளில் உயர்கல்வி பயில்வதற்கான வாய்ப்பினை எம்.எஸ்.பி.வேலாயுத நாடார் லட்சுமித்தாயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியைச் சேர்ந்த 19 மாணவர்கள் பெற்றுள்ளனர். மேலும் கோவையில் உள்ள பி.எஸ்.ஜி, குமரகுரு, கொங்கு போன்ற தரவரிசையில் முதன்மையான பல கல்லூரிகளிலும் 28 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். மாணவர்கள் அனைவரையும் கல்லூரி தாளாளர் எம்.எஸ்.பி.வி.காளியப்பன் மற்றும் கல்லூரி முதல்வர், ஆலோசகர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்