விவசாயியை தாக்கிய என்ஜினீயர் சிறையில் அடைப்பு

முன்விரோதம் காரணமாக விவசாயியை இரும்பு கம்பியால் தாக்கிய என்ஜினீயர் சிறையில் அடைக்கப்பட்டார்.

Update: 2023-01-12 19:06 GMT

இரும்பு கம்பியால் தாக்குதல்

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டையை அடுத்துள்ள பாலையூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ராமைய்யா (வயது 55), விவசாயி. அதே தெருவில் வசிப்பவர் சம்பத் (23), என்ஜினீயர். இவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்துள்ளது.

இந்தநிலையில் நேற்று காலை ராமைய்யா பாலையூர் பஸ் நிறுத்தத்திற்கு வந்துள்ளார். அப்போது சம்பத் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் ராமைய்யாவை சரமாரியாக தாக்கியுள்ளார்.

சிறையில் அடைப்பு

இதில் படுகாயம் அடைந்த ராமைய்யாவை அருகே இருந்தவர்கள் மீட்டு பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக வி.களத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பத்தை கைது செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்