மேட்டூர் அணையில் மூழ்கி என்ஜினீயர் பலி

Update: 2023-02-06 19:30 GMT

மேட்டூர்:-

மேட்டூர் அணையில் மூழ்கி என்ஜினீயர் பலியானார்.

என்ஜினீயர்

மேட்டூர் அருகே உள்ள வீரனூர் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவருடைய மகன் மாயக்கண்ணன் (வயது 24), என்ஜினீயர். நேற்று முன்தினம் இவர் மேட்டூர் அணை தண்ணீர் தேங்கி நிற்கும் திப்பம்பட்டி பகுதியில் உள்ள காவிரி ஆற்றில் துணி துவைப்பதற்காக சென்றார். அங்கு அவர் துணியை துவைத்து விட்டு நீர்த்தேக்கத்தில் நீந்தி உள்ளார்.

அப்போது ஆழமான இடத்திற்கு சென்ற அவர் நீந்தி செல்ல முடியாமல் தண்ணீரில் தத்தளித்து மூழ்கி இறந்து போனார். இதைபார்த்த அந்த பகுதியில் குளிக்க வந்தவர்கள், உடனடியாக மேட்டூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

உடல் மீட்பு

பின்னர் தீயணைப்பு படையினர் பரிசல் மூலம் நீர்த்தேக்க பகுதியில் சென்று சுமார் அரைமணி நேரம் தேடி மாயக்கண்ணனின் உடலை மீட்டனர். தகவல் அறிந்து வந்த கருமலைக்கூடல் போலீசார், நீரில் மூழ்கி பலியான மாயக்கண்ணனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மேட்டூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த சம்பவம் குறித்து கருமலைக்கூடல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்