தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை

நெகமம் அருகே தூக்குப்போட்டு என்ஜினீயர் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-27 17:24 GMT

நெகமம்

பொள்ளாச்சியை அடுத்த நெகமம் காளியப்பம்பாளையத்தைச் சேர்ந்தவர் தர்மராஜ். இவருடைய மகன் சபரி கார்த்தி (வயது 27). என்ஜினீயர். இவர் பல்வேறு இடங்களில் வேலை தேடியும் கிடைக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் வாழ்க்கையில் விரக்தியடைந்த அவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெகமம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்