திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து; ஒருவர் கைது

கள்ளக்குறிச்சி அருகே திருமணம் நிச்சயிக்கப்பட்ட வாலிபருக்கு சரமாரி கத்திக்குத்து; ஒருவர் கைது

Update: 2023-02-14 18:45 GMT

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி அருகே புத்தந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் தேவேந்திரன் மகன் ஏழுமலை(வயது 26). இவருக்கும், அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த அய்யம்பெருமாள் மகன் அஜித்குமார்(24) என்பவர் ஏழுமலையை பார்த்து நான் காதலித்த பெண்ணை நீ எப்படி திருமணம் செய்யலாம் என்று கூறி தன்னிடம் இருந்த கத்தியால் அவரது முதுகில் சரமாரியாக குத்தினார். இதில் வலி தாங்க முடியாமல் அலறிய ஏழுமலை ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். இது குறித்த புகாரின் பேரில் அஜித்குமார் மீது கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிந்து அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

மேலும் செய்திகள்