உரிமைத்தொகை முகாம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு முகாமை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

Update: 2023-07-24 04:38 GMT

தருமபுரி,

தருமபுரி மாவட்டம் தோப்பூரில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்ப பதிவு முகாமினை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். ரூ.1000 உரிமைத்தொகை திட்டத்தினை செப்.15-ல் தொடங்கி வைக்க உள்ள நிலையில் முகாம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.

மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்கள், டோக்கன்கள் ஏற்கனவே பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. டோக்கனில் குறிப்பிட்டுள்ள நாள், நேரத்தில் குடும்ப தலைவிகள் முகாமில் விண்ணப்பிக்க வேண்டும். முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியால் மகளிர் சுய உதவிக்குழுக்கள் திட்டம் 1989-ல் தருமபுரியில் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு முழுவது ம் 36,000 இடங்களில் சிறப்பு முகாம்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் பயனாளிகளின் வங்கிக்கணக்கில் மாதம் தோறும், ரூ.1000 செலுத்தப்பட உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்