அமலாக்கத்துறை சோதனை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை - அமைச்சர் முத்துசாமி பேட்டி

அமலாக்கத்துறை சோதனை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை என்று அமைச்சர் முத்துசாமி கூறியுள்ளார்.

Update: 2023-07-17 06:02 GMT

ஈரோடு,

அமைச்சர் பொன்முடி வீட்டில் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தி வருவது குறித்து அமைச்சர் முத்துசாமி ஈரோட்டில் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

"அமைச்சர் பொன்முடி என்ன தவறு செய்தார்; அவர் மீது என்ன குற்றச்சாட்டு உள்ளது. அமலாக்கத்துறை சோதனை பாஜகவின் பழிவாங்கும் நடவடிக்கை. அமலாக்கத்துறை சோதனையை சட்டரீதியாக சந்திப்போம். மதுவால் ஏற்படும் பாதிப்பு குறித்து விழிப்புணர்வு முகாம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 21 வயதிற்கு கீழ் மது வாங்க வருபவர்களை அழைத்து அன்பான அறிவுரை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளோம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்