32 அரசு பள்ளியில் மின் சக்தி மன்றம்

32 அரசு பள்ளியில் மின் சக்தி மன்றத்தை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

Update: 2022-09-23 18:45 GMT

திருப்பத்தூர்

32 அரசு பள்ளியில் மின் சக்தி மன்றத்தை முதன்மை கல்வி அலுவலர் தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள 32 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் எனர்ஜி கிளப் (மின் சக்தி மன்றம்) தொடக்க விழா மற்றும் ஆசிரியர்களுக்கு மின் சிக்கனம் மற்றும் மின் நுகர்வோருக்கான மின் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி திருப்பத்தூர் ெரயில்வே ஸ்டேஷன் ரோட்டில் உள்ள திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் கூடுதல் தலைமை பொறியாளர் ஜெய்னுலாபுதீன் தலைமை தாங்கினார். செயற் பொறியாளர் ஜி. அருள்பாண்டியன் முன்னிலை வகித்தார். செயற் பொறியாளர் எம். சம்பத் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர்.மதன்குமார், மாவட்ட கல்வி ஒருங்கிணைப்பாளர் ஆர்.பிரபாகரன், உதவி செயற் பொறியாளர் எம்.கண்ணன் உள்பட பலர் பேசினர்.இதுகுறித்து செயற் பொறியாளர் அருள் பாண்டியன் கூறுகையில் இதன் மூலம் ஆசிரியர்களுக்கு மின் சிக்கனம், மின்பாதுகாப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டு ஒவ்வொரு பள்ளியிலும் 25 உறுப்பினர்களை கொண்ட புதிய எனர்ஜி கிளப் தொடங்கப்பட்டு அவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

மேலும் மாவட்டம் முழுவதும் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்படும் என தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் உதவி செயற் பொறியாளர்கள் பிரபு, மோகனசுந்தரம், ரத்தினம், முஸ்தபா, சுதாகர் உள்பட உதவி பொறியாளர்கள், மின்வாரிய அலுவலர்கள், பணியாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் உதவி செயற் பொறியாளர் சோமு நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்