33 பள்ளிகளில் ஆற்றல் மன்றம் தொடக்கம்

மின்சார சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 33 அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆற்றல் மன்றம் தொடங்கப்பட்டு உள்ளது.

Update: 2022-12-30 18:45 GMT


தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் கோவை மாநகர் மின்பகிர்மான வட்டம் மற்றும் மத்திய திறனூக்க செயலகம் சார்பில் மின்சார சேமிப்பு மற்றும் சிக்கனம் குறித்து மாணவர்கள் இடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக கோவை மாநகரில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் 33 பள்ளிகளில் ஆற்றல் மன்றம் தொடங்கப்பட்டு உள்ளது.

இதையொட்டி அந்த பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான பயிற்சி கருத்தரங்கு கோவை காந்திபுரத்தில் நடைபெற்றது. இதில் செயற்பொறியாளர் வினோதன் கலந்து கொண்டு பேசினார்.

இதில் பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் ஆற்றல் மன்ற ஒருங்கிணைப் பாளர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

அவர்கள் தங்களின் பள்ளிகளில் ஆற்றல் மன்றங்களை தொடங்கி மின்சிக்கனம் தொடர்பாக மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்ற னர்.

இதையொட்டி தேர்வு செய்யப்பட்ட பள்ளிகளில் ஆற்றல் மன்றம் என்ற பெயர் பலகை நிறுவப்பட்டு உள்ளது.

ஆற்றல் மன்றத்தில் சேர்ந்த மாணவர்களுக்கு உறுப்பினர் அட்டை, அடையாள குறியீடு, உறுப்பினர் சான்றிதழ் வழங்கப்பட்டது. மேலும் மின்சிக்கனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பள்ளிகளில் மாணவர்களுக்கு பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகள் நடத்தப்பட உள்ளது.

மேலும் ஆற்றல் மன்றத்திற்கு வாட்ஸ்அப் குழு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாக மின்சார வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்