ஆரணி கோட்டை மைதானம் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

ஆரணி நகரில் கோட்டை மைதானம் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2023-02-08 12:47 GMT

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகரில் உள்ள கோட்டை மைதானம் சுற்றிலும் நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. இது சம்பந்தமாக சமூக ஆர்வலர்கள் ஆரணி வருவாய் கோட்டாட்சியர் எம்.தனலட்சுமியிடம் கொடுத்த புகாரின் பேரில் ஆரணி நகராட்சி நிர்வாகம் கோட்டை மைதானம் சுற்றிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தரவிட்டார்.

அதைத் தொடர்ந்து ஆரணி நகராட்சி ஆணையாளர் பி.தமிழ்ச்செல்வி தலைமையில் ஆரணி தாசில்தார் ஆர்.ஜெகதீசன், வருவாய் ஆய்வாளர் நித்தியா, கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயச்சந்திரன், கண்ணதாசன் மற்றும் தூய்மை பணியாளர்களை கொண்டு கோட்டை மைதானம் சுற்றிலும் உள்ள கடைகளை அகற்றினர்..

பின்னர் அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி சுற்றுச்சுவர் அருகாமையில் இருந்த கடைகளையும், புதிய பஸ் நிலையம் அருகாமையில் இருந்த கடைகளையும் அகற்றினர். 

Tags:    

மேலும் செய்திகள்