சாலையோர ஆக்கிரமிப்புகள் அகற்றம்

பெதப்பம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

Update: 2023-09-08 15:47 GMT

குடிமங்கலம்

பொள்ளாச்சி-தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் பெதப்பம்பட்டி நால்ரோடு உள்ளிட்ட முக்கிய பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

மாநில நெடுஞ்சாலை

பொள்ளாச்சி- தாராபுரம் மாநில நெடுஞ்சாலை வழியாக தினமும் இருசக்கர வாகனங்கள் மட்டுமின்றி கனரக வாகனங்களும் அதிக அளவில் சென்று வருகின்றன. இது தவிர கேரளாவிற்கு அதிக அளவில் காய்கறிகள் கொண்டு செல்லப்படுகின்றன. பொள்ளாச்சி -தாராபுரம் மாநில நெடுஞ்சாலையின் சில பகுதிகளில் ஆக்கிரமிப்புகள் இருந்தன. ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி சம்பந்தப்பட்ட உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் கடந்த வாரத்தில் நோட்டீஸ் வழங்கப்பட்டது. இந்த நிலையில் நேற்று வருவாய்த்துறை அதிகாரிகள் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் முன்னிலையில் மாநில நெடுஞ்சாலையில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது..

பொதுமக்கள்

பொள்ளாச்சி தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-

பொள்ளாச்சி -தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. பெதப்பம்பட்டியில் வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், வங்கிகள், பள்ளி கல்லூரிகள் ஒன்றிய அலுவலகம் உள்ளிட்டவை இயங்கி வருகிறது. கிராமப்புறங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். இதனால் பெதப்பம்பட்டி நால்ரோடு நெரிசல் மிகுந்த பகுதியாக இருந்து வந்தது. இந்த நிலையில் பொள்ளாச்சி தாராபுரம் மாநில நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன. ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதால் போக்குவரத்திற்கு ஏதுவாக இருக்கும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags:    

மேலும் செய்திகள்