கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றம்

கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட வீடு இடித்து அகற்றம்

Update: 2023-05-16 21:46 GMT

கடத்தூர்

கோபி அருகே உள்ள மேவாணி கிராமத்தில் மாரியம்மன் கோவில் வீதியில் கருப்புசாமி கோவிலுக்கு சொந்தமான 1,000 சதுர அடி இடம் உள்ளது. கோவில் திருவிழா காலங்களில் அந்த இடம் பயன்படுத்தப்பட்டு வந்தாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த இடத்தை ஆக்கிமிரத்து ஒருவர் வீடு கட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடர்பான வழக்கை சென்னை ஐகோர்ட்டு விசாரித்து, கோவில் இடத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடத்தை இடித்து அகற்ற உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து கோபி தாசில்தார் உத்திரசாமி, மண்டல துணை தாசில்தார் இலக்கிய செல்வன் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் மேவாணி கிராமத்துக்கு சென்று ஆக்கிரமிப்பு செய்து கட்டப்பட்டிருந்த வீட்டை பொக்லைன் எந்திரம் மூலம் இடித்து அகற்றினர். இதையொட்டி அங்கு கோபி போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகவேலு தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்