தனியார் வேலை வாய்ப்பு முகாமில் 1,000 பேருக்கு பணி நியமன ஆணை

நெய்வேலி அருகே கொள்ளுக்காரன்குட்டையில் நடைபெற்ற வேலை வாய்ப்பு முகாமில் 1,000 பேருக்கு பணி நியமன ஆணைகளை அமைச்சர் சி.வெ.கணேசன் வழங்கினார்.

Update: 2022-07-30 16:36 GMT

நெய்வேலி, 

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணங்க நெய்வேலி அடுத்த கொள்ளுக்காரன்குட்டையில் உள்ள வள்ளலார் மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளியில் கடலூர் மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.

இதில் கடலூர் மாவட்டத்தை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டனர். 189 தனியார் நிறுவனங்களை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டு இளைஞர்களிடம் நேர்காணல் நடத்தினர். இதில் 1,052 இளைஞாகள் தேர்வு செய்யப்பட்டனர்.

பணி ஆணை

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்திலேயே நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டா் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் நெய்வேலி சபா,ராஜேந்திரன், விருத்தாசலம் ராதா கிருஷ்ணன், கூடுதல் கலெக்டர் பவன் குமார் கிரியப்பனவர், வேலைவாய்ப்பு மண்டல துணை இயக்குனர் சந்திரன், பண்ருட்டி ஒன்றியக்குழு தலைவர் சபா.பாலமுருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக தமிழக தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் கலந்துகொண்டு 1,052 பேருக்கு பணி நியமன ஆணையை வழங்கி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்