நாமக்கல் அரசு கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

நாமக்கல் அரசு கல்லூரியில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 7-ந் தேதி நடக்கிறது.

Update: 2023-07-03 19:00 GMT

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தீனதயாள் உபத்யாய ஊரக திறன் பயிற்சி திட்டத்தின் கீழ் மாவட்ட இயக்க மேலாண்மை அலகின் வாயிலாக, படித்து வேலைவாய்ப்பற்ற ஆண், பெண் இருபாலருக்கும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் மூலம் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்கும் பொருட்டு மாவட்ட அளவிலான தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாமக்கல் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் வருகிற 7-ந் தேதி காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இந்த முகாமில் நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த படித்து வேலைவாய்ப்பற்ற இருபாலரும் கலந்து கொண்டு பொருத்தமான நிறுவனங்களை தேர்வு செய்து பயிற்சி மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்று கொள்ளலாம்.

மேலும் வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பணியாளர்களை தேர்வு செய்ய விரும்புகிற தனியார் நிறுவனங்கள் திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், மாவட்ட இயக்க மேலாண்மை அலகு, கலெக்டர் அலுவலகம் என்கிற முகவரியில் தொடர்பு கொண்டு தங்களது நிறுவனத்தின் பெயரை 6-ந் தேதி மாலை 5 மணிக்குள் பதிவு செய்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்