வேலைவாய்ப்பு முகாம்

பாலிடெக்னிக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம் நடந்தது.

Update: 2023-02-27 19:11 GMT

நெல்லை ஏ.கே.ஒய். பாலிடெக்னிக் கல்லூரியில் புதுச்சேரி ரானே நிறுவனம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. கல்லூரி இயக்குனர் பொறியாளர் எஸ்.செய்யது முகம்மது தலைமை தாங்கினார். கல்லூரி இயக்குனர் பொறியாளர் எம்.செய்யது முகம்மது, ஆலோசகர் தமிழ் வீரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி துணை முதல்வர் முகம்மது மதார் வரவேற்றார். ரானே நிறுவனத்தின் மனிதவள மேம்பாட்டு மேலாளர் அபிராமி தாசன் பங்கேற்று, பணி பற்றிய விவரங்களை எடுத்துரைத்தார். முடிவில், மெக்கானிக்கல் துறை விரிவுரையாளர் சேகர் நன்றி கூறினார். எழுத்து தேர்வு மற்றும் நேர்முக தேர்வு மூலம் தேர்ச்சி பெற்ற மெக்கானிக்கல் மற்றும் எலக்ட்ரிக்கல் துறை மாணவர்களை கல்லூரி நிர்வாகத்தினர் பாராட்டினர்.

Tags:    

மேலும் செய்திகள்