மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு முகாம் வருகிற 15-ந் தேதி நடக்கிறது

Update: 2022-11-11 19:32 GMT

பேட்டை:

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மையம் சார்பில், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவன பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம், பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள சுந்தரனார் அரங்கில் வருகிற 15-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணி அளவில் நடக்கிறது. இதில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வசிக்கும் 2021 மற்றும் 2022-ம் ஆண்டு இளங்கலை பட்டம் (பி.காம், பி.ஏ., பி.பி.ஏ., பி.பி.எம்., பி.எம்.எஸ், பி.எஸ்சி. தகவல் தொழில்நுட்பம்/ கணினி அறிவியல்/ பொது) பெற்றவர்கள் கலந்து கொள்ளலாம்.

கலை அறிவியல் மற்றும் வணிகம் சார்ந்த இளங்கலை பட்டம் பெற்ற மாணவ-மாணவிகள் அனைவரும் டாடா நிறுவனத்தில் கணினி சேவைகள், வணிக தீர்வுகள் மற்றும் ஆலோசனை சார்ந்த பிரிவுகளில் பணி அமர்த்தப்படுவார்கள்.

நேர்காணலில் கலந்து கொள்ள விரும்புகிறவர்கள் பல்கலைக்கழக இணையதளத்தில் (https://www.msuniv.ac.in/) தங்கள் சுயவிவர குறிப்பு தகவலை பதிவு செய்ய வேண்டும். நேர்காணலுக்கு வரும்போது பயோ டேட்டா, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், கல்வி சான்றிதழ்கள் மற்றும் ஆதார் அல்லது ஏதாவது ஒரு அடையாள அட்டையுடன் வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 0462-2563213, 2563437 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். ஏற்பாடுகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக வேலைவாய்ப்பு மைய அதிகாரிகள் சுந்தரராமன், தினேஷ்குமார் செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்