திருவாரூர் மாவட்ட கலெக்டர் சாருஸ்ரீ விடுத்துள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, படித்து வேலைவாய்ப்பு தேடும் இளைஞர்களை தனியார் துறைகளில் பணியமர்த்தும் நோக்கத்தோடு திருவாரூர் மாவட்ட அரசு நிர்வாகம் சார்பில் தனியார்த்துறை வேலைவாய்ப்பு முகாம் திருவாரூர் புதுத்தெரு மயிலாடுதுறை சாலையில் உள்ள நியூ பாரத் மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளில் வருகிற 5-ந்தேதி (சனிக்கிழமை) நடக்கிறது. முகாமில் தொழில்துறை, விற்பனைத்துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்த 150-க்கும் மேற்ப்பட்ட தனியார்த்துறை நிறுவனங்கள் பங்கேற்க உள்ளன. இந்நிறுவனங்கள் சுமார் பத்தாயிரம் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறவனங்கள் கலந்து கொண்டு இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தேர்வு செய்ய உள்ளனர். உயர்கல்வி, சுயவேலைவாய்ப்பு மற்றும் வங்கி கடன் குறித்து சம்மந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்டவுள்ளனர். இத்தனியார்த்துறை முகாமில் 8-ம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு மற்றும் ஐ.டி.ஐ, டிப்ளமோ, பி.இ, நர்சிங் படிப்புகள் போன்ற கல்வித்தகுதியுடைய 18 வயது முதல் 40 வயதிற்குட்பட்ட வேலை தேடுபவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்களும் தங்களது சுயவிவர குறிப்பு, ஆதார் அட்டை மற்றும் கல்விச்சான்று நகல்களுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். மேலும், இத்தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து அந்த படிவத்தினை பதிவிறக்கம் செய்து முகாமிற்கு கொண்டு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.