மின்சாரம் பாய்ந்து ஊழியர் சாவு

சேலத்தில் மின்சாரம் பாய்ந்து ஊழியர் இறந்தார்.

Update: 2022-08-12 22:54 GMT

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்த மங்களபுரத்தை சேர்ந்தவர் செம்மலை (வயது 43). இவர் சேலத்தில் மின்சார வாரிய ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று அரிசிபாளையம் பகுதியில் உள்ள ஒரு மின்கம்பத்தில் பழுது பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். இதில் உயிருக்கு போராடிய அவரை மீட்டு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல்சிகிச்சைக்காக கோவைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து பள்ளப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்