நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த ஊழியர் கைது

பண்ருட்டி அருகே நிச்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் செய்ய மறுத்த ஊழியர் கைது

Update: 2023-06-29 18:45 GMT

பண்ருட்டி

பண்ருட்டி அருகே உள்ள தொரப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமணன் மகன் பிரகாஷ் (வயது 36). இவர் பண்ருட்டியில் உள்ள கடையில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கும் சேமக்கோட்டை பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த ஏப்ரல் மாதம் திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அப்போது திருமணத்தின்போது, மணமகளுக்கு செய்ய வேண்டிய சீர்வரிசை குறித்து இருவீட்டார் தரப்பிலும் பேசி முடிவெடுக்கப்பட்டது. இந்த நிலையில் பிரகாஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் வரதட்சணையாக கூடுதல் நகைகள் வேண்டும் என கேட்டுள்ளனர். அதற்கு பெண் வீட்டார் தரப்பினர் கூடுதலாக நகை தர முடியாது என்று கூறி உள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பிரகாஷ் அந்த பெண்ணை திருமணம் செய்ய முடியாது என மறுத்து விட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி வழக்கு பதிவு செய்து வாலிபர் பிரகாஷை கைது செய்தார்.

Tags:    

மேலும் செய்திகள்