தனியார் நிறுவன ஊழியர் தவறி விழுந்து சாவு

மத்திகிரி அருகே தனியார் நிறுவனத்தில் சோலார் பொருத்தும் பணியின் போது தவறி விழுந்து ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-11-16 18:45 GMT

மத்திகிரி:

மத்திகிரி அருகே தனியார் நிறுவனத்தில் சோலார் பொருத்தும் பணியின் போது தவறி விழுந்து ஊழியர் பரிதாபமாக இறந்தார்.

ஊழியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆவலப்பள்ளி அட்கோவை சேர்ந்தவர் அர்ஜூன் (வயது 31). இவர் பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் ஊழியராக வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இவர் மத்திகிரி அருகே கலுகொண்டப்பள்ளியில் உள்ள தனியார் நிறுவனத்தில் சோலார் பொருத்தும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக உயரமான பகுதியில் இருந்து அவர் தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே அர்ஜூன் பரிதாபமாக இறந்தார்.

போலீசார் விசாரணை

இது குறித்து மத்திகிரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று அர்ஜூனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிேசாதனைக்கு பின்னர் அவரது உடலை குடும்பத்தினரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்