குழந்தைகளின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் குழந்தைகளின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறினார்.

Update: 2022-08-16 20:03 GMT

இல்லம் தேடி கல்வி திட்ட தன்னார்வலர்கள் குழந்தைகளின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞானகவுரி கூறினார்.

பயிலரங்கு

விருதுநகரில் உள்ள ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்ட அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட அளவில் தொடக்கநிலை தன்னார்வலர்களுக்கான ஊக்கப்படுத்துதல் மற்றும் கற்றல் கற்பித்தலுக்கான பயிலரங்கு மாவட்ட உதவி திட்ட அலுவலர் ஜோதிமணி ராஜன் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட கல்வி அதிகாரி திருப்பதி முன்னிலை வகித்தார்.

இப்பயிலரங்கை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இல்லம் தேடி கல்வியை நோக்கமாக கொண்டு கடந்த ஆறு மாத காலமாக மாணவர்களுக்கு தன்னார்வலர்கள் சிறப்பாக எடுத்து செல்கிறார்கள். ஏற்கனவே தன்னார்வலர்களுக்கு 3 பயிற்சி புத்தகங்கள் வழங்கப்பட்டு அவை முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 4-வது கட்டமும் வெளியிடப்பட்டுள்ளது.

எழுத்தறிவு

குழந்தைகளின் இயல்புகளை புரிந்து கொண்டு அவருடைய தனித்தன்மைக்கு முக்கியத்துவம் அளித்து, உள்ளார்ந்த திறன்களையும், படைப்பாற்றலையும் வெளிக்கொணர திட்டமிட்டு பயிற்சி வழங்கப்படுகிறது. மாணவர்களும் அவரவர் வயதிற்கும், வகுப்புக்கும் உரிய கற்றல்அடைவுகளை அடைவதற்கு தேவையான செயல்பாடுகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அனைத்து மாணவர்களுக்கும் உரிய கற்றல் அடைவுகளை அடைந்ததை உறுதி செய்திட வேண்டும். அவ்வாறு கற்றல் அடைவுகள் அடைந்திடாத மாணவர்களுக்கு உரிய செயல்பாடுகளை அளித்து கற்றல்அடைவு பெற்றிட உறுதுணை புரிந்திடவேண்டும். உயர் தொடக்க நிலையில் உள்ள மாணவர்களுக்கு எழுத்தறிவு மற்றும் எண்ணறிவுடன் பாடத்திட்டத்தோடு தொடர்புடைய அடிப்படை திறன்களை வளர்த்தெடுப்பதற்கு ஏதுவாக வலுவூட்டும் செயல்பாடுகள் விளையாட்டு முறையில் தர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் 120 ஆசிரிய பயிற்றுனர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மாடசாமி, சுரேஷ் குமார் ஆகியோர் செய்திருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்